ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” பட டிரெய்லர் வெளியானது

இப்படம் வருகிற மே மாதம் திரையங்குகளில் வெளியாக உள்ளது.
ஆண்டனி வர்கீஸின் “காட்டாளன்” பட டிரெய்லர் வெளியானது
Published on

‘மார்கோ’ படத்தை அடுத்து ‘காட்டாளன்’ என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரித்துள்ளார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், ஆண்டனி வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகை துஷாரா விஜயன் அறிமுகமாகின்றார். யானை தந்தம் கடத்தல் குறித்த ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பான்-இந்திய வெற்றிப் படமான 'காந்தாரா' படத்திற்கு இசையமைத்து பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், தற்போது ஷரீப் முஹமது தயாரிக்கும் இரண்டாவது படமான கட்டாளன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படம் வருகிற மே மாதம் திரையங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் 3 விதமான ஒலி அனுபவங்களில் கிடைக்கிறது. ரசிகர்கள் அதனை கேட்டு மகிழலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com