அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஜய் தேவ்கன் நடித்த ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தின் பரபரப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், விஜய் சல்கோன்கரின் குடும்பத்தை சுற்றி மீண்டும் பிரச்சினைகள் உருவாகுவதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த வகையில், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்’ திரைப்படத் தொடர் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றுள்ளது. இதன் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ (Drishyam: The Conclusion) என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது படத்தின் பரபரப்பான டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், விஜய் சல்கோன்கரின் குடும்பத்தை சுற்றி மீண்டும் பிரச்சினைகள் உருவாகுவதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

மீண்டும் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன்

முந்தைய இரண்டு பாகங்களிலும் தனது புத்திசாலித்தனமான திட்டங்களால் குடும்பத்தை காப்பாற்றி போலீசாரை திணறடித்த விஜய் சல்கோன்கர் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் மூன்றாம் பாகத்திலும் அவர் தொடர்கிறார். மேலும், ஸ்ரேயா சரண் மற்றும் தபு ஆகியோரும் தங்களது முந்தைய கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளனர். குறிப்பாக ஜெய்தீப் அஹ்லாவத்தின் கதாபாத்திரம் படத்தின் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் சல்கோன்கர் தனது குடும்பத்தை காப்பாற்ற இந்த முறையும் எந்த மாதிரியான திட்டத்தை கையாளப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்

‘திரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் இறுதி அத்தியாயமாக உருவாகியுள்ள ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் சல்கோன்கர் இந்த முறையும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து தனது குடும்பத்தை காப்பாற்றுவாரா? அல்லது அவரது கடந்த கால ரகசியங்கள் வெளிவருமா? என்பதே படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com