மிதுன் நடித்த `அரிகொம்பன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

மிதுன் மகேஸ்வரன் இயக்கி நடித்த 'அரிகொம்பன்' படம் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதுன் நடித்த `அரிகொம்பன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on: 

சென்னை,

இந்த படத்தின் டிரெல்யர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’.

முக்கிய கதாபாத்திரங்களில்...

மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் சஜிஷ்ணா சேவியர், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11-ல் ரிலீஸ்

‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காடுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. இந்த டீசர், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

புரமோஷன் பணி

இதற்கிடையில், ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் புரொமோஷனுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. ‘அரிகொம்பன்’ யானையின் மாதிரி உருவம் இடம்பெற்றுள்ள வாகனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வருகிறது. இந்த யானையின் மாதிரி உருவத்துடன் ரசிகர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் டேக் செய்து பதிவிட்டால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

டிரெய்லர் வெளியீடு

இந்த நிலையில், இந்த படத்தின் டிரெல்யர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்க செய்துள்ளது.

X