ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ‘பிளாஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ‘பிளாஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘பிளாஸ்ட்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படக்குழு தற்போது ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com