அனன்யா பாண்டே நடித்த 'சாந்த் மேரா தில்' படத்தின் டிரெய்லர் வெளியானது

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 22ந் தேதி வெளியாக உள்ளது.
அனன்யா பாண்டே நடித்த 'சாந்த் மேரா தில்' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு காலி பீலி, கெஹ்ரையான், லைகர், சிடிஆர்எல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இந்தி சினிமாவில் முன்னணியில் ஜொலித்து வரும் நடிகை அனன்யா பாண்டேவை, தமிழில் நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகை அனன்யா பாண்டே லக்ஷ்யாவுடன் இணைந்து 'சாந்த் மேரா தில்' என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். விவேக் சோனி இயக்கிய இந்த படத்தினை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர், மரிஜ்கே டிசோசா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 22ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com