வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இப்படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி வெளியாக உள்ளது.
வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில், துப்பாக்கி, அஞ்சான், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஸ்ட்ரீட் பைட்டர் என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டது.

களரி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகர் வித்யுத் ஜம்வாலின், ஆக்சன் காட்சிகளுக்காகவே அவருக்குத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தப் படத்தில், தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார், இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இப்படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com