"தி வெர்டிக்ட்" படத்தின் டிரெய்லர் வெளியானது


தி வெர்டிக்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது
x

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘தி வெர்டிக்ட்’ படம் வரும் மே 30-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்'. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையாக உருவாகி உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சரக்குமார் வெளியிட்டார். இதற்கிடையில் இந்த படத்தினை பற்றி கூறிய இயக்குனர் கிருஷ்ணா சங்கர், "இந்தக் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. மர்மமான மர்டர் மிஸ்டரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களுக்கு புதிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் வழக்கறிஞராக நடித்துள்ளார். கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்' படம் வரும் மே 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

1 More update

Next Story