

சென்னை,
இப்படம் வரும் அக்டோபர் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘கறிவிடி லட்சுமி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ஆனந்தி. அந்த படத்தில் அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அந்த படம் அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரை பெற்றுத்தந்தது. அதனைதொடர்ந்து 'சண்டிவீரன்', 'திரிஷா இல்லைனா நயன்தாரா', 'விசாரணை', 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு', 'ரூபாய்', 'மன்னர் வகையறா', ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் ‘கறிவிடி லட்சுமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் ராக் மயூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அங்கித் கொய்யா, வி.கே. நரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார். கவுரி நாயுடு ஜம்மு எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர்.
வட ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறக் கலைஞர் கறிவிடி லட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ‘புர்ரகதா’ கலை மூலம் அடையாளம் பெற்ற அவரது வாழ்க்கைப் பயணம், போராட்டங்கள் மற்றும் சாதனைகளை இப்படம் பதிவு செய்கிறது. படத்தில் கறிவிடி லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ஆனந்தி நடித்துள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘கறிவிடி லட்சுமி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் கறிவிடி லட்சுமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள், கலைப் பயணம் மற்றும் அவர் சந்தித்த சவால்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.