அர்ஜுன் தாஸின் “பாம்” பட டிரெய்லர் வெளியானது


அர்ஜுன் தாஸின் “பாம்” பட டிரெய்லர் வெளியானது
x
தினத்தந்தி 30 Aug 2025 12:11 PM IST (Updated: 8 Sept 2025 4:18 PM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 12ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இவர் தற்போது பாம் என்ற படத்தில் நடித்து கதாநாயகனா நடித்து முடித்துள்ளார். இதனை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இப்படத்தில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ‘பாம்’ படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பாம் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story