வெளியானது அதர்வாவின் ‘தணல்’ பட டிரெய்லர்...திரைக்கு வருவது எப்போது?

இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார்.
The trailer of Atharvaa's 'Thanal' has been released... When will it hit the screens?
Published on

சென்னை,

அதர்வா நடித்துள்ள 'தணல்' திரைப்படத்தின் 'டிரெய்லரை' படக்குழு வெளியிட்டுள்ளது.

''பாணா காத்தாடி'', ''பரதேசி'', ''சண்டிவீரன்'' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா . இவர் தற்போது 'இதயம் முரளி' படத்தை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் அஸ்வின், லாவண்யா திரிபாதி , பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லரில் தயாராகி உள்ள இத்திரைப்பட படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ''டிரெய்லர்'' தற்போது வெளியாகி இருக்கிறது. அதனுடன், இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதையும் படக்குழு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com