'கேப்டன் மில்லர்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு..!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
'கேப்டன் மில்லர்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் 'கில்லர் கில்லர்', 'உன் ஒளியிலே' மற்றும் 'கோரனாரு' என்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் 12-ந்தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com