தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை,

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com