'எலக்சன்' படத்தின் டிரைலர் வெளியானது

'எலக்சன்' திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'எலக்சன்' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி.எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'எலக்சன்' திரைப்படம் மே மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்,'எலக்சன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது . இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'எலக்சன்'  டிரைலர் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com