கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா பட டிரைலர் வெளியானது

இந்த திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா பட டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், வருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com