உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படத்தின் டிரைலர் வெளியானது

‘கண்ணை நம்பாதே’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அந்த போஸ்டரில், 'ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு எமோஷனல் கதை இருக்கும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கு பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும் என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Udhay (@Udhaystalin) February 26, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com