கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' படத்தின் டிரைலர் வெளியானது

கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஜப்பான்' திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com