வைபவ் நடித்துள்ள 'ரணம்' படத்தின் டிரைலர் வெளியானது

'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.
வைபவ் நடித்துள்ள 'ரணம்' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'ரணம்'. வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

கிரைம் திரில்லர் படமாக 'ரணம்' உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com