'இராவண கோட்டம்' படத்தின் டிரைலர் வெளியானது..!

சாந்தனு நடித்துள்ள 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
'இராவண கோட்டம்' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

'இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com