ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் டிரைலர் வெளியானது..!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'ருத்ரன்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com