நாளை வெளியாகும் 'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர்

கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.
நாளை வெளியாகும் 'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர்
Published on

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

பல சிக்கல்களை தாண்டி கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com