அனுபமா பரமேஸ்வரன் நடித்த "தி பெட் டிடெக்டிவ்" படத்தின் டிரெய்லர் வெளியானது

"தி பெட் டிடெக்டிவ்" படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ளது.
அனுபமா பரமேஸ்வரன் நடித்த "தி பெட் டிடெக்டிவ்" படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கிய "பைசன்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, பிரணீஷ் விஜயன் இயக்கத்தில் "தி பெட் டிடெக்டிவ்" என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ஷராபுதீன் நடித்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 16ந் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com