'டி.என்.ஏ' படத்தின் டிரெய்லர் வெளியானது

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'டி.என்.ஏ' படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.
'டி.என்.ஏ' படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

'பாணா காத்தாடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி 'டி.என்.ஏ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார்.

டி.என்.ஏ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.'டி.என்.ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள 'டி.என்.ஏ' படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் 'டி.என்.ஏ' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com