தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தி கிரே மேன்' ஹாலிவுட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடித்துள்ள 'தி கிரே மேன்' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' மற்றும் 'எண்ட் கேம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 22-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி காட்சிகள் நிறைந்த தி கிரே மேன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com