வைரலாகும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர்...!

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வைரலாகும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர்...!
Published on

சென்னை,

நடிகர் சந்தானம் சமீபத்தில் வெளியான 'கிக்' படத்திற்கு பின்னர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என பெயரிடப்பட்டுள்ளது.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. ஆனால் அறிவித்தபடி டிரைலர் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். மேலும் பல சிலிர்ப்பூட்டும் அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. . இந்த படம் 1974ம் ஆண்டு காலகட்டத்தில் கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com