விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' படத்தின் டிரைலர் வெளியானது

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரத்தம்' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'ரத்தம்'.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'ரத்தம்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com