இன்று மாலை வெளியாகிறது 'தளபதி69' படத்தின் அப்டேட்

தளபதி 69 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The update of 'Thalapathy 69' movie will be released this evening
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் படம் தி கோட். இப்படம் விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தை தொடர்ந்து, அவர் தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான அதிகாரபூரவ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக பிரபல தயாரிப்பு நிறுவனமாக கே.வி.என் அறிவித்துள்ளது. இது தொடர்பாக  வீடியோ ஒன்றையும்  கே.வி.என் நிறுவனம் பகிர்ந்து இது தங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் என்றும் அதில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com