வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 'மல்லிப்பூ பாடல்' வீடியோ நாளை வெளியீடு

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ‘மல்லிப்பூ பாடல்’ வீடியோ நாளை வெளியாகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 'மல்லிப்பூ பாடல்' வீடியோ நாளை வெளியீடு
Published on

சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மல்லிப்பூ பாடல்' வீடியோ நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com