சிரஞ்சீவி அணிந்துள்ள 'வாட்ச்' விலை ரூ.2 கோடி

சிரஞ்சீவி ரூ.2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் அணிந்துள்ளார்.
சிரஞ்சீவி அணிந்துள்ள 'வாட்ச்' விலை ரூ.2 கோடி
Published on

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் குடும்பத்தினருடன் ராக்கி பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் ரசிகர்கள் கவனத்தை கவர்ந்தது. உடனடியாக அதன் விலையை தெரிந்து கொள்வதற்காக வலைத்தளத்தில் தேடினர்.

அப்போது அந்த வாட்ச் விலை 2.35 லட்சம் டாலர்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியாகும். இந்த விலை இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

2 கோடியில் கைக்கடிகாரமா? என்று சிலர் விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர். இன்னும் சிலர் சிரஞ்சீவி இரவோடு இரவாக செல்வந்தர் ஆகவில்லை. கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி உயர்ந்து இருக்கிறார். அவர் ரூ.2 கோடி விலையில் கைக்கடிகாரம் அணிவதில் என்ன தவறு என்று பதிலடி கொடுத்தனர்.

பொதுவாகவே சிரஞ்சீவி ஒரு வாட்ச் பிரியர். விதம்விதமான கைக்கடிகாரங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com