“மன்னித்துவிடுங்கள் மேதா...” - நடிகையுடனான திருமண வதந்திக்கு நடிகர் கொடுத்த நகைச்சுவை பதில்!

சமய் ரெய்னா தனது பாணியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேதா சங்கர்
Published on

மும்பை,

நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா மற்றும் நடிகை மேதா சங்கர் ஆகியோர் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தநிலையில், சமய் ரெய்னா தனது பாணியில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமய் ரெய்னாவின் நகைச்சுவையான பதில்

இது தொடர்பாக சமய் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "டிசம்பரில் எனக்கு இந்தியா முழுவதும் கலைநிகழ்ச்சி சுற்றுப்பயணம் இருக்கிறது. மேதா சங்கர், மன்னிக்கவும், திருமணத்தை ஒத்திவைக்க வேண்டி வரும்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த மேதா சங்கர், திருமண வதந்திகளை கிண்டல் செய்யும் வகையில் ஒரு மீமையும் பகிர்ந்திருந்தார்.

எப்படி தொடங்கியது வதந்தி?

சமய் ரெய்னாவின் ‘இன்டியாஸ் காட் லேட்டன்ட்’ நிகழ்ச்சியின் 2-வது சீசனில் மேதா சங்கர், நடிகர் வருண் தவான் மற்றும் ஷரோன் வர்மா ஆகியோருடன் நடுவராக பங்கேற்றார். இதன் பின்னர் இருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவத் தொடங்கின.

இருப்பினும், தாங்கள் காதலிப்பதாக சமய் ரெய்னாவோ அல்லது மேதா சங்கரோ இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

மேதா சங்கர்

மேதா சங்கர் கடைசியாக அவினாஷ் திவாரி நடித்த ‘கின்னி வெட்ஸ் சன்னி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

முன்னதாக 2023-ம் ஆண்டு வெளியான ‘12த் பெயில்’ திரைப்படத்தில் ஷ்ரத்தா ஜோஷி கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாஸியுடன் இணைந்து நடித்ததன் மூலம் மேதா சங்கர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com