சுவையான மீன் குழம்பும் சாதமும்... நெகிழ்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்


The yummiest fish curry and rice - malavikamohanan
x

கொச்சி சென்றுள்ள மாளவிகா மோகனன் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொச்சி,

மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் சித்தாந்த் சதுர்வேதியுடன் 'யுத்ரா' படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும், மோகன்லாலுடன் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கொச்சி சென்றுள்ள மாளவிகா மோகனன் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'ஐலேண்ட் வாழ்க்கை, உப்பு காற்று, சுவையான மீன் குழம்பு, சாதம் குறிப்பாக அந்த அப்பளம். என்னுடைய சொந்த ஊருபோல இங்கு உணர்கிறேன்'என்று கொச்சியில் பொழுதுபோக்கியதை ஒரு போஸ்டாக பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

1 More update

Next Story