தனுஷுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய தேனாண்டாள் பிலிம்ஸ்

கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, தனுஷ் விரைவில் தெரிவிக்காவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனுஷுக்கு எதிராக  நோட்டீஸ் அனுப்பிய தேனாண்டாள் பிலிம்ஸ்
Published on

இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நடிகர் தனுஷுக் எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நான் ருத்ரன் என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக, 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காமல், பிற படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததாலும் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸில், 2025ம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com