சேலையில் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளது - நடிகை ருக்மிணி வசந்த்

மாடர்ன் உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும் என்று நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.
சேலையில் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளது - நடிகை ருக்மிணி வசந்த்
Published on

'காந்தாரா' படத்துக்கு பிறகு, இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக உயர்ந்திருக்கிறார், ருக்மிணி வசந்த். ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் வருகிறார். தற்போது அவர் நடிகர் யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் நடித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் 2 புதிய படங்களிலும் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் சேலை குறித்து ருக்மிணி வசந்த் பேசிய விஷயம் கவனிக்க வைத்திருக்கிறது.

அவர் கூறும்போது, "சேலையில் ஒரு அதிசயம் ஒளிந்துள்ளதாகவே நினைக்கிறேன். மாடர்ன் உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் அணிவோரை அழகாக காட்டுவது சேலை தான். அந்த சேலை அணிவதை நான் மகிழ்ச்சியாக உணருகிறேன். மற்ற உடைகளை காட்டிலும் சேலையில் நான் இன்னும் 'பளிச்'சென தெரிகிறேன்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com