

தற்போது தெலுங்கில் புஷ்பா, இந்தியில் மிஷன் மஷ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராஷ்மிகா கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உங்களை விட வயது குறைந்த இளைஞரை காதலிப்பீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து ராஷ்மிகா கூறும்போது, நம்மை விட வயது குறைந்தவரை காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது?. காதலுக்கு வயது என்பது தடை இல்லை. மொழியும் தடை இல்லை. காதலிப்பவர் உங்களைப் பற்றி நன்றாக உணர வேண்டும், அந்த நபர் உங்களை மாற்ற முயற்சிக்கக்கூடாது. உங்களிடம் ஆதிக்கம் செலுத்தாதவராக இருக்க வேண்டும்'' என்றார்.