மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை - விஷ்ணு விஷால் பதிவு

நடிகர் விஷ்ணு விஷால் மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை - விஷ்ணு விஷால் பதிவு
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், "மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்று 'லால் சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com