"வி.ஜே.பார்வதி பத்தி பேச எதுவும் இல்லை.."- மேடையில் கலாய்த்த விஜய் சேதுபதி

வி.ஜே.பார்வதி "முத்து என்கிற காட்டான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"வி.ஜே.பார்வதி பத்தி பேச எதுவும் இல்லை.."- மேடையில் கலாய்த்த விஜய் சேதுபதி
Published on

சென்னை,

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் "முத்து என்கிற காட்டான்". இதில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். இத்தொடரில் மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நடிகர்கள் சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் நாளை (மார்ச் 27) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான விஜே பார்வதி மற்றும் முத்து குமரன் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்தார்.

அதில், “சிம்பு, சூர்யா போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும் போது என்னை ‘பிக் பாஸ்’ செய்ய வைத்த ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப் அவர்களுக்கு நன்றி. விஜே பார்வதி குறித்து பேச ஒன்றும் இல்லை. வாரா வாரம் ‘பாரு’விடம் பேசி சலித்து விட்டேன். வி.ஜே.பார்வதி மீது உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் இந்த வெப் தொடரை பார்த்த பிறகு அவரை நீங்கள் விரும்புவீர்கள்” என கூறினார்.

மேலும், “முத்து குமரன் இந்த தொடரில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான நடிகர். அவரை இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் ஆகியோரிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தத் தொடரில் "லலிதா" என்ற பாத்திரத்தில் விஜே பார்வதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com