விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை: வருமான வரித்துறை வாதம்


விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தவறு இல்லை:  வருமான வரித்துறை வாதம்
x

வருமானத்தை மறைத்ததாக நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதத்தை வருமான வரித்துறை விதித்து.

சென்னை,

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று கூறியிருந்தார். ஆனால், புலி படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி பெற்றதை, வருமான வரிக்கணக்கில் காட்டாமல் நடிகர் விஜய் மறைத்துள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததது.

அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சீனிவாஸ் ஆஜராகி, ''இந்த அபராத தொகையை காலதாமதமாக விதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறுவது சரியல்லை. அவர்கள் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை விஜய் தரப்பில் அணுகினார்கள். தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னர், இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை'' என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வருகிற 23-ந் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story