''ஷாருக்கான் எனக்கு அப்பா மாதிரி'' - அனன்யா பாண்டே


Theres no one like Shah Rukh Khan: Ananya Panday
x

சமீபத்திய பேட்டியில் ஷாருக்கான் குறித்து அனன்யா பேசினார்

சென்னை,

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை அனன்யா பாண்டே. 'ஸ்டூடன்ட் ஆப் தி இயர் 2', 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக கேசரி சாப்டர் 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ஷாருக்கான் குறித்து அனன்யா பேசினார்.அவர் கூறுகையில்,

" ஷாருக்கான் எனக்கு 2-வது அப்பா மாதிரி. அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை அருமையாக கையாளுவார். நான் சிறு வயதில் இருக்கும்போது, ஆர்யன், சுஹானா மற்றும் அப்ராம் ஆகியோருக்கு அவர் எவ்வளவு அற்புதமான தந்தை என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அவரைப்போல யாரும் இல்லை

அவர் உங்களுடன் பேசும்போது, நீங்கள்தான் உலகில் உள்ள ஒரே நபர் என்பதுபோல் உணர வைத்துவிடுவார். அவர் என்னுடைய சிறந்த தோழியின் அப்பா, அதனால் நாங்கள் எல்லா ஐபிஎல் போட்டிகளுக்கும் அவருடன் செல்வோம்' என்றார்

1 More update

Next Story