காந்தாரா நடிகையின் ’தி ரைஸ் ஆப் அசோகா’...முதல் பாடல் அப்டேட்


TheRiseOfAshoka 1st Single releasing on 25.11.25 at 5:40 PM
x
தினத்தந்தி 23 Nov 2025 12:04 PM IST (Updated: 26 Nov 2025 6:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தில் காந்தாரா நடிகை சப்தமி கவுடா கதாநாயக்கியாக நடிக்கிறார்.

சென்னை,

சதீஷ் நினாசம் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம்' தி ரைஸ் ஆப் அசோகா ' . இந்தப் படத்தில் காந்தார நடிகை சப்தமி கவுடா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் சதீஷின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் பி சுரேஷ், ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா, யாஷ் ஷெட்டி, டிராகன் மஞ்சு, மற்றும் விக்ரம் வேதா-புகழ் ஹரிஷ் பேரடி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் முன்பு அசோகா பிளேட் என்று அழைக்கப்பட்டது , ஆனால் இயக்குனர் வினோத் தொண்டேலின் மறைவுக்குப் பிறகு படம் நிறுத்தப்பட்டது.

நடிகர் சதீஷ் நினாசம் பின்னர் அதை ’தி ரைஸ் ஆப் அசோகா’ என்ற புதிய தலைப்பில் மீண்டும் உயிர்ப்பித்தார். விருத்தி கிரியேஷன்ஸ் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் தயாரித்த இந்த படத்தின் கதையை தயானந்த் டி.கே எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கேளாய் மாதேவா என்ற பாடல் வருகிற 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு வெளியாகிறது.

1 More update

Next Story