என்னை லேடி பிரபாஸ் என்கிறார்கள் - பிரபல நடிகை

தமிழில் இவர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிதி ஷெட்டி, கடந்த 2018 ஆம் ஆண்டு கேஜிஎப் திரைப்படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார். கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீநிதி, சமீபத்தில் நானி நடித்த ஹிட் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் இவர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் தெலுசு கடா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது. தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், புரமோஷன் விழா ஒன்றில் பேசிய ஸ்ரீநிதி தன்னை லேடி பிரபாஸ் என்று அழைப்பதாக தெரிவித்தார். தான் பிரபாஸை போல சமூக ஊடகங்களில் குறைவாகவே ஆக்டிவாக இருப்பதால் தன்னை லேடி பிரபாஸ் என்று அழைப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story






