“என் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடுகிறார்கள்” - விஜய் சேதுபதி

‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
“என் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாடுகிறார்கள்” - விஜய் சேதுபதி
Published on: 

சென்னை,

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “என் ரசிகர்களுக்கு என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் படத்தை கொண்டாடுவது மட்டுமின்றி, என்னைப் பற்றி பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது, சண்டை போடுவது என உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை நினைத்து எனக்கென ஒரு கூட்டம் இருப்பதும், எனக்காக துடிப்பதும் பெருமையாக இருக்கிறது. என்றார்.

சென்னையில் வெற்றி விழா

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘பத்தா’. அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ‘பத்தா’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர். இதில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ரசிகர்களுக்கு நன்றிக்கடன்

விழாவில் பேசிய விஜய் சேதுபதி, “என் ரசிகர்களுக்கு என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் படத்தை கொண்டாடுவது மட்டுமின்றி, என்னைப் பற்றி பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது, சண்டை போடுவது என உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை நினைத்து எனக்கென ஒரு கூட்டம் இருப்பதும், எனக்காக துடிப்பதும் பெருமையாக இருக்கிறது.

‘தேவையில்லாமல் கெத்து காட்டுவது அறிவை மழுங்கடிக்கும்’

இப்படி என் வெற்றியை தன் வெற்றியாக மற்றவர்கள் கொண்டாடும்போது, இந்த வாழ்க்கை வரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதுபோன்ற தருணங்களில் என் தந்தையின் புகைப்படத்தை பார்த்து, ‘என்ன தகப்பா...’ என்று சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்துக்கும் மிகவும் மெனக்கெடுகிறேன். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் வெட்கத்தை விட்டுக் கேட்டுவிடுவேன். தேவையில்லாமல் கெத்து காட்டுவது என் அறிவை மழுங்கடித்துவிடும். இதுதான் சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பாடம். அதை என்றுமே மறக்க மாட்டேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com