'வாழ்க்கையில் நடப்பதை மலையாளத்தில் படமாக எடுக்கிறார்கள், அதனால்தான்...'- பாக்யராஜ்

வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும் என பாக்யராஜ் கூறினார்.
'They film what happens in life in Malayalam, that's why...' - Bhagyaraj
Published on

சென்னை,

சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், 'இஎம்ஐ- மாதத் தவணை'. சாய் தான்யா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாக்யராஜ், நம் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும் என கூறினார். அவர் கூறுகையில்,

"மலையாளத்தில் அங்கு இங்கு என்று கதைகளை தேடி படம் பண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை வைத்து படம் பண்ணுகிறார்கள். அதனால்தான், சீக்கிரம் படம் எடுக்க முடிகிறது, அதிக செலவில் செட் போட வேண்டியதில்லை, கோடி கணக்கில் செலவிட வேண்டியதும் இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும்'என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com