நடிப்பை விட அதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர் - டாப்சி பன்னு

டாப்சி திரை உலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து பேட்டி அறித்துள்ளார்.
நடிப்பை விட அதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர் - டாப்சி பன்னு
Published on

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி பன்னு. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி திரை உலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் வயிற்றை படம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். பாலிவுட்டில் மார்பகங்களை படம் பிடிக்கிறார்கள். இப்படி ஏன் நடக்கிறது என நான் யோசித்து இருக்கிறேன். தென்னிந்தியாவில் சில நேரம் நடிகைகளை பேடட்பிரா அணிய சொல்கிறார்கள்.

இது மிகவும் தொந்தரவாகவும், அவமானமாகவும் இருக்கிறது. படப்பிடிப்புக்கு தயாராகும் போது படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் நம்மை பார்த்து கொண்டிருப்பது சங்கடமாக இருக்கிறது. பார்வையாளர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக நடிகைகளின் உடல் உறுப்புகளை காட்ட இது போன்ற செயல்களில் இயக்குனர்கள் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com