

சென்னை,
'பத்தா' பிரமாதமான எழுத்து. சிரிப்பும் விசும்பலுமாய் ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம் என்று இயக்குநர் ராஜு முருகன் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.
‘பத்தா’படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பிரலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி பதிவிட்டு வரகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் ராஜு முருகன் ‘பத்தா’ படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, 'பத்தா' பிரமாதமான எழுத்து. சிரிப்பும் விசும்பலுமாய் ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம். எழுத்திலும் உருவாக்கத்திலும் தரமான வேலையைச் செய்திருக்கும் நண்பர் பாலாஜி தரணிதரனுக்கும், தயாரிப்பாளர் அட்லீக்கும், நடிப்பில் அள்ளும் அந்தச் சிறுவன் சாய்க்கும், விஜய் சேதுபதி, லிஜோ மோல், ஒளிப்பதிவாளர் நண்பர் செல்வகுமார், இசையமைப்பாளர் சாய், எழுத்தாளர் கரண் கார்க்கி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.