'அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகி விட்டனர்'- வைரலாகும் கிருத்திகா உதயநிதி பதிவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, தனது சமூக வலைதளத்தில் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகி விட்டனர்'- வைரலாகும் கிருத்திகா உதயநிதி பதிவு
Published on

கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காளி' உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தயாரித்த 'மங்கை' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்திகா உதயநிதி வெளியிட்டிருந்தார். இதை வைத்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியாயின.

இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில், " சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையை பார்த்தால் வியப்பாக உள்ளது; அனைவரும் கெஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்'' என்று அவர் பதிவு செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com