வீட்டில் தமிழ்தான் பேசுவாங்க.. உயிர், உலக் குறித்து பெருமையாக சொன்ன நயன்தாரா


வீட்டில் தமிழ்தான் பேசுவாங்க.. உயிர், உலக் குறித்து பெருமையாக சொன்ன நயன்தாரா
x

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் துபாய் விமான நிலையத்தில் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவுக்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் நயன்தாரா, கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். தங்கள் செல்ல மகன்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று பெயரிட்டுள்ள இந்த ஜோடி, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தங்கள் பிள்ளைகளுடன் விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், நயன்தாரா -விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் துபாய் விமான நிலையத்தில் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. துபாய் விமான நிலையத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வலைப்பேச்சு குழுவினரை தற்செயலாக சந்தித்துள்ளனர்.

அப்போது, அந்தணன், பிஸ்மி ஆகியோருக்கு உயிர், உலக்கை “ஹாய்” சொல்ல வைத்தார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் வந்த உலக் “வணக்கம்” என்று சொல்வதை கேட்டுத் திகைத்த வலைப்பேச்சு குழுவினர், “தமிழ் நல்லா சொல்லிக் கொடுத்திருக்கீங்களே” என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த நயன்தாரா, “வீட்டிலேயும் தமிழில்தான் பேசுவாங்க” என்று கூறினார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story