“என் முகத்தை திருடிட்டாங்க!” – ‘அவதார்’ படத்துக்கு எதிராக நடிகை வழக்கு

தனது முக அமைப்பை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார் நடிகை கொரியன்கா கில்ச்சர்.
“என் முகத்தை திருடிட்டாங்க!” – ‘அவதார்’ படத்துக்கு எதிராக நடிகை வழக்கு
Published on

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற அவதார் திரைப்படத்தைச் சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஹாலிவுட் நடிகை கொரியன்கா கில்ச்சர், அந்த படத்தில் இடம்பெற்ற நெய்திரி கதாபாத்திரத்தின் முக அமைப்பு தனது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் டிஸ்னி நிறுவனத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது முக அமைப்பை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ள கொரியன்கா கில்ச்சர், அவதார் படத்தின் பல பில்லியன் டாலர் லாபத்தில் தனக்கும் பங்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தற்போது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com