

அஜித்குமார் ரசிகர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தின் பின்னணி இசையை காப்பியடித்து அப்படியே டிரெய்லரின் இறுதி காட்சியில் பயன்படுத்தி இருந்தனர்.
இந்த பின்னணி இசை விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் அறிமுகமாகும்போது இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் இசையை திருடியதற்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இசையமைப்பாளர் இமானை தொடர்பு கொண்டு கேட்டபோது, விஸ்வாசம் படத்தில் இருந்து எனது பின்னணி இசையை திருடி மர்ஜாவன் இந்தி படத்தில் பயன்படுத்தி இருப்பதாக அஜித் ரசிகர்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது. தயாரிப்பு நிறுவனத்திடமோ, என்னிடமோ முன்கூட்டி அனுமதி எதுவும் பெறவில்லை. அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கலாம் என்றார்.
இந்த இசையை படத்தில் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பு தரப்பில் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எதிர்ப்பு காரணமாக யூடியூப்பில் வெளியிட்ட மர்ஜாவன் இந்தி பட டிரெய்லரின் கீழ் பின்னணி இசை இமான் என்று பெயரை சேர்த்துள்ளனர்.