19 ஆண்டுகளை நிறைவு செய்த 'திருப்பதி' திரைப்படம்


19 ஆண்டுகளை நிறைவு செய்த திருப்பதி திரைப்படம்
x

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'திருப்பதி' படம் வெளிவந்து இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருப்பதி'. இந்த படத்தில் சதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், லைலா, ரியாஸ் கான், லிவிங்ஸ்டன் மற்றும் அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பாரதிவாஜ் இசையமைத்துள்ளார்.

ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரித்த இப்படம் ஆக்ஷன் சென்ட்டிமென்ட் கலந்த கதையில் உருவாகி உள்ளது. இந்த படம் 100 நாட்கள் மேல் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படம ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்ற இப்படம் வெளிவந்து இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #19YearsOfTirupathi என்ற ஹாஷ்டேக்-ஐ பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.

1 More update

Next Story