அடுத்த படம்...ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியான இளம் நடிகர்

ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தீயவர் குலை நடுங்க என்ற படத்தில் நடித்துள்ளார்.
Thiruveer Pairs with Aishwarya Rajesh for Upcoming Film
Published on

சென்னை,

தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோவின் வெற்றிக்குப் பிறகு, இளம் நடிகர் திருவீர், தனது அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்திருக்கிறார். பரத் தர்ஷனின் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார்.

சி.எச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார். படப்பிடிப்பு வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தீயவர் குலை நடுங்க என்ற படத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com