ராம் சரண் - சுகுமார் படத்தில் கதாநாயகி இவரா?


This heroine in talks to romance Ram Charan in his next
x

ராம் சரண், புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் 'ஆர் ஆர் ஆர்' படத்தை தொடர்ந்து, சங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்திருந்தார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து இருந்தார்.

இப்படத்தையடுத்து, தற்காலிகமாக ஆர்.சி 16 எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். புச்சி பாபு இயக்கும் இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ராம் சரண், புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படம் குறித்து வெளியாகி இருக்கும் தகவலின்படி, நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகிக்கான தேர்வில் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தை சுகுமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story